மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து  

Estimated read time 1 min read

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
கோயம்புத்தூருக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் (AI 2732), விமான நிலையத்தின் ‘டாக்ஸிவே’ (Taxiway) பகுதியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
அதே நேரத்தில், ஹைதராபாத்தில் இருந்து வந்து தரையிறங்கிய இண்டிகோ விமானம் (6E 791) தனது நிறுத்தத்தை நோக்கிச் சென்றது.
அப்போது, எதிர்பாராதவிதமாக இரண்டு விமானங்களின் சிறகு முனைகளும் (Wing tips) ஒன்றோடொன்று உரசின.

You May Also Like

More From Author