குட் நியூஸ்… தமிழகத்தில் தனியார் பால் விலை அதிரடி குறைப்பு…!!

தமிழ்நாட்டில் பால் விற்பனையை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் முன்னிலையில் இருக்கிறது. ஏனெனில் தனியார் நிறுவனங்களை விட ஆவின் பால் விலை குறைவாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது தனியார் பால் நிறுவனங்களாக ஹட்சன் மற்றும் ஆரோக்கியா நிறுவனம் ஆகியவைகள் பால் விலையை குறைத்துள்ளது. அதன்படி ஒரு லிட்டருக்கு ரூ.2 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தயிர் லிட்டருக்கு ரூ.4 வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரு மாதங்களாக பால் விற்பனையானது 20% வரை குறைந்ததால் தற்போது பால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

You May Also Like

More From Author