கடந்த 5 ஆண்டுகளில், அதாவது சீனாவின் 14ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தின் போது, பன்னாட்டு தொடர்புகள் மற்றும் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாட்டவர்களுக்கான விசாச் சலுகை கொள்கையை சீன அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இது வரை, 75 நாடுகளுக்கு ஒருதலைப்பட்சமாகவோ அல்லது முழுமையாகவோ பரஸ்பர விசா தேவையை சீனா நீக்கியுள்ளது. அது போன்றே 55 நாடுகளைச் சேர்ந்த சீனாவைக் கடந்து வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குச் செல்லும் போது, விசா தேவையில்லாமல் சீனாவில் குறிப்பிட்ட நேரம் தங்கியிருக்கலாம். சீனாவின் எல்லை நுழைவாயில்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்கள் சீனாவில் இடைதங்குவதற்கான காலமானது 240 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், ஹைநான் மாநிலத்திற்கு நுழைவதற்கான விசா விலக்கு, ஆசியான் நாடுகளின் சுற்றுலாக் குழுக்களுக்கான விசா விலக்கு, பயணக் கப்பல் மூலம் நுழைவதற்கான விசா விலக்கு போன்ற பிராந்திய விசா விலக்கு கொள்கைகளும் உள்ளன. இத்தகு நடவடிக்கைகள் மூலம், சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் சீனாவில் வசதியாக சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதோடு, வணிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்படத்தக்கது.
சீனாவின் இத்தகைய விசா விலக்கு கொள்கை, சேவை மற்றும் வர்த்தக அதிகரிப்பை விரைவுபடுத்தி, உலகத்திற்கும் நலன்களையும் வளர்ச்சி வாய்ப்புகளையும் கொண்டு வரும்.