நம்ம ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் OpenAI CEO சாம் ஆல்ட்மேனுடன் ஒரு அரிய சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ரஹ்மான் தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.
இது, ரஹ்மானின் AI-இயங்கும் திட்டத்திற்கான ஒரு சந்திப்பு எனவும் அவர் கூறியிருந்தார்.
ரஹ்மான் ஆல்ட்மேனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
அங்கு இருவரும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்திய படைப்பாளர்களை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்து ஆராய்ந்தனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
தனது பதிவில், ரஹ்மான் ஆல்ட்மேனை டேக் செய்து, ஒலி மற்றும் குறியீட்டை ஒன்றாக இணைப்பதை நோக்கமாகக் கொண்ட அவரது வரவிருக்கும் virtual உலகளாவிய இசைக்குழு திட்டமான “சீக்ரெட் மவுண்டன்” பற்றி பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை திடீரென சந்தித்த AR ரஹ்மான்
