கதா பானம் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த கதா பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கதா பானத்தில் தேன் கலந்து குடித்தால் எப்படிப்பட்ட இருமலும் சரியாகும்.
கதா பானம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமான பிரச்சனைகளை சரி செய்து விடும்.
கதாபானம் அருந்துவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
குளிர்காலத்தில் மூட்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு கதா பானத்தில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 2 கப்
கிராம்பு – 5
துளசி – 6 இலைகள்
கருப்பு மிளகு. – 6
இஞ்சி – 1 துண்டு
லவங்கப்பட்டை – 2 அங்குலம்
தேன் – ½ தேக்கரண்டி
செய்முறை
முதலில் இஞ்சி மிளகு கிராம்பு லவங்கப்பட்டை போன்றவற்றை நசுக்கி எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் நசுக்கி வைத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.
துளசி இலைகளையும் போட்டு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் வற்றியதும் வடிகட்டி தேன் சேர்த்து அருந்தலாம்.