பப்பாளி அனைவரின் விருப்பமான உணவாகும்.பப்பாளி ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அழகு பராமரிப்பிலும் உதவுகிறது.
தினமும் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பப்பாளி உடலுக்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.
பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட், மெக்னீசியம், ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் தாமிரம் உள்ளது. எனவே பப்பாளியை காலையில் சாப்பிடுவது பசியை குறைக்க உதவுகிறது.
பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பப்பாளியில் பப்பெய்ன் என்ற செரிமான நொதி மற்றும் ஏராளமான உணவு நார்ச்சத்து உள்ளது,
இது மலச்சிக்கலுக்கு கூடுதலாக அஜீரணம், நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வயிற்றுப் புண்களின் அபாயத்தைக் குறைக்கும்.