தஜிகிஸ்தானில் ஒளிபரப்பப்படவுள்ள ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழிகள் என்ற நிகழ்ச்சி

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தஜிகிஸ்தானில்  அரசுமுறைப் பயணம் மேற்கொள்கின்ற போது, சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஷிச்சின்பிங்கிற்கு பிடிக்கும் பழமொழிகள் என்ற நிகழ்ச்சியின் தாஜிக் மொழிப் பதிப்பு தஜிகிஸ்தானில் ஒளிபரப்பப்படவுள்ளது

தஜிகிஸ்தானின் மக்கள் செய்தித்தாள் உள்ளிட்ட உள்ளூரின் பல முக்கிய செய்தி ஊடகங்கள் இந்நிகழ்ச்சி பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன. இது பல துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இது குறித்து தஜிகிஸ்தானின் பல்வேறு துறையினர் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷிச்சின்பிங்கின் ஆட்சிமுறை சார்ந்த அறிவுத்திறமையைத் தஜிகிஸ்தான் மக்கள் அறிந்து கொண்டு, சீனப் பண்பாடு பற்றிய புரிதலை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author