சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று புதன்கிழமை காலை, பொக்காரா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இது நேபாளத்தின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான இந்நிலையத்தில் தரையிறங்கிய முதல் சர்வதேச விமானமாகும்.
நேபாளத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சூடான் கிரதி மற்றும் நேபாளத்திற்கான சீன தூதர் சென் சோங் ஆகியோர் விமான நிலையத்தில், நேபாள தேசிய சட்டமன்றத்தின் தலைவர் கணேஷ் பிரசாத் திமில்சினா மற்றும் அவரது பிரதிநிதிகள் மற்றும் பிற பயணிகளையும் வரவேற்றனர்.
சீன அரசு கடனுதவியுடன், சீன நிறுவனம் கட்டிய பொக்காரா சர்வதேச விமான நிலையம், ஜனவரி 1ஆம் நாள் செயல்படத் துவங்கியது.
வருகை விழாவின் போது திமில்சினா பேசுகையில், இவ்விமான வருகை, நேபாள-சீனா உறவுகள் மற்றும் நேபாளத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனத் தரப்பு அளித்துள்ள முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது என்று கூறினார்.