மத்திய வங்க கடலில் இன்று சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே நாளை 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஜூலை 7 முதல் ஜூலை 9ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் மத்திய அரபுக் கடலில் ஜூலை 9ஆம் தேதி வரை இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி வரை பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நெல்லை,ராமநாதபுரம் மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, சென்னை, திருவள்ளூர், ஈரோடு, தஞ்சை, சேலம், தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.