நாசா விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சியின் படி, நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓட தொடங்கியுள்ளது.
நிலவின் நேரம் ஒரு நாளைக்கு 57 மைக்ரோ விநாடிகள் வேகமாக ஓட தொடங்கியுள்ளது என்று அந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், 52 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி வீரர்கள் கடைசியாக சந்திரனில் கால் பதித்தனர்.
அப்போதிருந்த நேரத்துடன் ஒப்பிடும்போது நிலவின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக பார்க்கும் போது, இது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியாது. ஆனால், பூமி மற்றும் சந்திரனின் நேரம் சரியாக இருந்தால் தான், நேவிகேஷன் அமைப்புகள் போன்ற செயற்கைகோள்கள் துல்லியமாக செயல்படும்.