குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  

Estimated read time 0 min read

இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்தப் படத்தில் தன்னுடைய பாடல்களை, உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, ₹5 கோடி இழப்பீடு கோரி அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
தனது பாடல்களைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளையராஜா சார்பில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதற்கு, பாடல்களைப் பயன்படுத்த சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் பதிலளித்திருந்தது.
ஆனால், அந்த உரிமையாளர் யார் என்பதைப் பற்றி அவர்கள் தெரிவிக்கவில்லை என்று இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author