விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளிநாடுகளில் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கடல் கடந்து வெளிநாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைக்கட்டின.
ஸ்காட்லாந்தில் இந்திய வம்சாவளியினர் விநாயகர்ச் சதுர்த்தியை உற்சாகமாகக் கொண்டாடினர். பாரம்பரிய உடையணிந்து பேரணியாகச் சென்று, இசை வாத்தியங்கள் இசைத்து ஆட்டம், பாட்டத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல் ஜெர்மனியிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைக்கட்டியது. பாரம்பரிய உடையில் ஆட்டம், பாட்டத்துடன் ஜெர்மனியின் முக்கிய வீதிகளை இந்திய வம்சாவளியினர் அதிரச் செய்தனர். தொடர்ந்து விநாயகர் சிலையுடன் ஊர்வலமாகச் சென்று மக்கள் வழிபாடு நடத்தினர்.