அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு காலக்கெடு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வி படிக்க ஆர்வம் காட்டுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்தார்.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள், மாணவர்களிடையே உயர்கல்வி மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் தேவைக்கேற்ப, இந்த ஆண்டு 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்லூரி இல்லாத பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
