ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு  

Estimated read time 1 min read

ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ஐ இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) திருத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளதாக எழுந்த வதந்திகளுக்கு மத்தியில், மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னருக்கு கூடுதல் அதிகாரத்தை அளித்துள்ளது.

உள் பாதுகாப்பு, அரசாங்க வழக்கறிஞர்களை நியமித்தல், அரசாங்க அதிகாரிகளை இடமாற்றுதல் உள்ளிட்ட விஷயங்களில் தற்போது ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு இனி மேற்கூறிய விஷயங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே இருக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author