அமெரிக்க மேலாதிக்கத்துக்கு பன்னாட்டு மக்கள் எதிர்ப்பு

அமெரிக்கா, சுங்க வரி மூலம் மேலாதிக்கம் செய்து வரும் செயல்கள், பல நாடுகளில் கடும் கண்டனத்தையும், எதிர் நடவடிக்கைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

அண்மையில் சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சி ஜி டீ என் நிறுவனம், உலகளாவிய இணையப் பயன்பாட்டாளர்களிடம் மேற்கொண்ட கருத்து கணிப்பு முடிவின்படி, பல்வேறு நாடுகள் கைகோர்த்துக் கொண்டு நடவடிக்கைகளை எடுத்து, அமெரிக்க மேலாதிக்கத்தைக் கூட்டாக எதிர்த்து, சொந்த நலன்கள் மற்றும் தற்போதைய சர்வதேச வர்த்தக ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டும் என்று பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்களில் 86.9 விழுக்காட்டினர், சுங்க வரி கொள்கை மூலம் மேலாதிக்கம் செய்த செயலுக்கு எதிரான நடவடிக்கைகள்,  சொந்தமான நியாயமான நலன்களைப் பேணிக்காக்கும் சரியான செயலாகும் என்று கருத்தினர்.

சர்வதேச வர்த்தகத்தில் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது, மக்களின் பொது எதிர்பார்ப்பாகும். பொருளாதாரம் மூலம் மேலாதிக்கம் செய்வது, தன்னைத் தானே பாதிக்கும் என்று சீனா வலியுறுத்தியது. 

You May Also Like

More From Author