உலகப் பொருளாதாரத்தின் நிதானமற்றதன்மை அதிகரித்த நிலைமையில், சீனா, மேலும் ஆக்கபூர்வமான நிலையான கொள்கைகளை வகுத்துள்ளது.
இது சொந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரிவதோடு, உலக பொருளாதாரத்திற்கும் பயனுள்ள தேவையை வழங்கும் என்று 10 மற்றும் 11ஆம் நாள் நடைபெற்ற சீன மத்திய பொருளாதார பணி கூட்டத்தில், அமெரிக்க-சீன ஒத்துழைப்பு நிதியத்தின் செயல் இயக்குநர் ஜோன் மிலார் ஹுவெட் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகும். இப்போது நடைபெற்ற இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. 8 முக்கிய கடமைகள் இக்கூட்டத்தில் அமைக்கப்பட்டன. இந்த 8 முக்கிய கடமைகளில், உள் நாட்டு சந்தையை வலிமைப்படுத்துவது, முதலிடத்தில் வகிக்கின்றது.
அடுத்த ஆண்டில், சீனா, புதுப்பிப்பில் ஊன்றி நின்று, புதிய வளர்ச்சி ஆற்றலை வலுப்படுத்தும். அன்னிய நுகர்வோர்களுக்காகவும் முதலீட்டாளர்களுக்காகவும் இது நல்ல செய்தியாகும். சர்வதேச நிலைமை எப்படி மாற்றினாலும், திறப்புப் பணியை விரிவாக்குவதில் சீனா ஊன்றி நின்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
