2023ஆம் ஆண்டின் சீன இணைய நாகரிக மாநாடு ஜூலை 18ஆம் நாள் ஃபூஜியன் மாநிலத்தின் சியாமென் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை தலைவர் லீ ஷுலெய் இம்மாநாட்டில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
மாபெரும் பயணத்தில் முன்னேறுவதற்கு நாகரிக ஆற்றலை ஒன்றிணைப்பது என்ற கருப்பொருள் கொண்ட இம்மாநாட்டில், தொடர்புடைய வாரியங்களின் பொறுப்பாளர்கள், இணையத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் இணைய பயனாளர் உள்ளிட்ட சுமார் 800 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இணைய நாகரிகக் கட்டுமானத்தை வலுப்படுத்துவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய கருத்துக்களை ஆழமாகக் கற்றுக் கொண்டு செயல்படுத்தி, நாகரிகத்துடன் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று இம்மாநாட்டில் பங்கெடுத்த விருந்தினர்கள் தெரிவித்தனர்.