1937ம் ஆண்டு டிசம்பர் 13ம் நாள் சீனாவை ஆக்கிரமித்த ஜப்பான் படைகள், நன் ஜிங் நகரைத் தாக்கி, 40 நாட்களில் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளன. இதில் சுமார் 3 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
இப்படுகொலையில் உயிரிழந்தோருக்கும், ஜப்பான் ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்ட சக நாட்டவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து, ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரில் உயிரை அர்ப்பணித்த வீரர்களை நினைவு கூர்ந்து, சீன மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஆக்கிரமிப்பு போர் ஏற்படுத்திய பேரழிவுகளை நினைவு கூரும் வகையில், டிசம்பர் 13ம் நாள் காலை, நன் ஜிங் படுகொலையில் உயிரிழந்தோரின் நினைவகத்தில் தேசிய பொது அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
படம்:VCG
