சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செர்பியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, ‘சீன-செர்பிய ஒத்துழைப்புக்கு ஒளியூட்டும் வலுவான நட்புறவு’ என்ற தலைப்பிலான கட்டுரை மே 7ஆம் நாள் அந்நாட்டின் நாளேடு ஒன்றில் வெளியிடப்பட்டது.
சீன மக்கள் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, இந்த அழகான நாட்டை 2ஆவது முறையாக வந்தடைகிறேன். சர்வதேச சூழ்நிலை எவ்வாறு மாறினாலும், சீனாவும் செர்பியாவும் எப்போதும் உண்மையான நண்பர்களாகவும் நல்ல கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன.
பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பின்பற்றி, இரு நாடுகளுக்கிடையேயான விரிவான நெடுநோக்குக் கூட்டாளியுறவு தொடர்ந்து முன்னேறி வருகின்றது என்று ஷிச்சின்பிங் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டினார்.
இந்த பயணத்தின் மூலமாகவே, சீன-செர்பிய நட்புறவை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு இரு நாட்டு மக்களுக்கு நன்மை அளிப்பதற்கும், உலக அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், மனிதகுல பொது சமூகத்தைக் கட்டியெழுப்புவதைக் கூட்டாக முன்னெடுப்பதற்கும், செர்பியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் அவர் வலியுறுத்தினார்