பங்களாதேஷில் அரசு வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறை தொடர்பாக மாணவர் போராட்டக்காரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு சார்பு மாணவர் ஆர்வலர்களுக்கு இடையே இடைவிடாத மோதல்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த வியாழக்கிழமை வன்முறையாக மாறிய இந்த போராட்டத்தில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் முழுவதும் போக்குவரத்தை முடக்க மாணவ கிளர்ச்சியாளர்கள் மூட முயன்றதால் தலைநகர் டாக்கா உட்பட நாடு முழுவதும் காவல்துறையினருக்கும் கலவரக்காரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
வாகனங்கள், காவல் நிலையங்கள் மற்றும் பிற நிறுவனங்களை எரித்த போராட்டக்காரர்களின் குழுக்களை விரட்ட, போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசியதால் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
இந்த கலவரங்களில் 39 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.