சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் இருந்து கடந்த 25-ஆம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டு, 26-ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த சுபன்ஷு சுக்லா, விண்வெளியில் பல்வேறு விதமான ஆய்வுகள் மற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், நுண்ணீர்ப்பு விசை மண்டலம் குறித்தும், விண்வெளியில் தாவரங்கள் வளர்ச்சி குறித்தும் அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.