ஜ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு முறையை உறுதியுடன் பேணிக்காக்கும் சீனா

 

ஐ.நா தொடர்ந்து இருக்க வேண்டும், ஆனால் அமைதி வாரியம் அதற்கு பதிலாக செயல்படலாம் என்ற டிரம்ப்பின் கூற்று குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், சீனா எப்போதும் உண்மையான பலதரப்புவாதத்தை செயல்படுத்தும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் 21ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், ஜ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு முறையையும், சர்வதேச சட்டத்தை அடித்தளமாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கையும், ஜ.நா. சாசனத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்ட சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறையையும் சீனா உறுதியாக பேணிக்காக்கும் என்றார்.

You May Also Like

More From Author