நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பாக விசாரித்த டெல்லி உச்சநீதிமன்றம் தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அறிவித்தது.
அதன்படி தேசிய தேர்வு முகமையானது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 557 நகரங்களில் கடந்த மே மாதம் தேர்வு நடைபெற்ற நிலையில் மொத்தம் 4750 மையங்களில் 23 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வினை எழுதினர்.
தற்போது முடிவுகள் வெளியான நிலையில் 11, 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைவான மைனஸ் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இதில் 2250-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு மதிப்பெண் கூட பெறாத நிலையில், 9,400-க்கும் அதிகமான மாணவர்கள் மைனஸ் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும் பிஹார் மாநிலத்தில் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் மைனஸ்-180 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில் இதுதான் நீட் தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் என்று கணக்கிடப்பட்டுள்ளது.