புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

மத்திய பட்ஜெட் 2024 : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.  காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றி வரும் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறார்.

அதில் முக்கிய அறிவிப்பாக முதல் முறை பணிக்குச் செல்பவர்களுக்கு, அரசு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தபடும் என அறிவித்தார். ஒரு மாதம் சம்பளம் வழங்குவதன் மூலம் 30 லட்சம் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாத ஊதியம் ரூ.1 லட்ச்த்துக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதைப்போல, உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்கு ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் எனவும் வேலைவாய்ப்பு, கல்வித்திறன் மேம்பாட்டிற்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு என்றும்,  80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Prime Minister’s Package for employment and skilling: 3 schemes announced for ‘Employment Linked Incentive’

Scheme A: First Timers
Scheme B: Job Creation in manufacturing
Scheme C: Support to employers pic.twitter.com/NYDLNjEaea

— Ministry of Finance (@FinMinIndia) July 23, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author