அடித்தது ஜாக்பாட்…! பீகார் மற்றும் ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் நிதி மழை…. எவ்வளவு தெரியுமா…? 

Estimated read time 1 min read

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் ஆதரவோடு பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு தற்போது பட்ஜெட்டில் நிதிமழை பொழியப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திராவில் தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு பெலாவரம்ம் நீர் பாசன திட்டத்தை முடிப்பதாக அரசு உறுதி ஏற்றுள்ள நிலையில், ஆந்திராவில் தொழில் வளர்ச்சியை முன்னேற்றப்படுத்தும் நோக்கில் தண்ணீர், எரிசக்தி, ரயில்வே மற்றும் சாலை உள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதோடு, விசாகப்பட்டினம்-சென்னை தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மூலதன செலவினத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், ராயலசீமா, பிரகாசம் மற்றும் வடக்கு கடலோர ஆந்திர ஆகிய பின் தங்கிய பகுதிகளுக்கு மானியங்கள் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே போன்று பீகாருக்கு கயாவில் தொழில் வளர்ச்சி, மேம்பாட்டு உதவி மற்றும் விரைவு சாலை அமைத்தல் போன்றவைகளுக்காக ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மின் உற்பத்தி திட்டங்களுக்கு 21,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு போன்றவைகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் மூலதன செலவினத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதோடு பல்வேறு வளர்ச்சி வங்குகளில் பீகாரருக்கு நிதி கோருவது துரிதப்படுத்தப்படும்.

பீகாரின் வெள்ளை தடுப்பு மற்றும் நீர் பாசன திட்டங்களை செயல்படுத்த 11,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கயாவிலுள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணு பாத், மகாபாதி கோவில்களுக்கு வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author