அறிவியல் தொழில் நுட்பச் சீர்திருத்தத்தில் சீனா மாபெரும் சாதனை

Estimated read time 1 min read

அறிவியல் தொழில் நுட்பத்தின் கட்டமைப்பு சீர்திருத்தத்தை முன்னேற்றுவதன் விளைவாக, சீனாவின் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது.


உள்நாட்டுத் தயாரிப்பான சி919 விமானம் வணிக பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது முதல், சாங்ஏ-6 விண்கலன் சந்திரனின் தொலைதூர பக்கத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்து திரும்பியது வரை, கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் தற்சார்பு அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்தில் வியக்கத்தக்க சாதனைகள் பெறப்பட்டுள்ளன.

சீன அறிவியல் கழகத்தின் அறிவியல் மற்றும் வளர்ச்சி ஆய்வகத் தலைவர் பான் ஜியௌஃபெங் கூறுகையில், புதிய எரியாற்றல் நுண்மதி இணைய வாகனம், 5ஜி தொலை தொடர்பு, உயர்வேக இருப்புப்பாதை உள்ளிட்டத் பல்வேறு துறைகளிலும் சீனா முன்னணியில் உள்ளது. புத்தாக்கமானது முழு சமூகத்தின் பொது கருத்தாக மாறியுள்ளதை இத்தகைய முக்கிய சாதனைகள் காட்டுகின்றன. இந்த பொது கருத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் சீனா அறிவியல் தொழில் நுட்பத் துறையில் பெரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author