பிப்ரவரி 17ஆம் நாள் ஐ.நா.பாதுகாப்பவையில் உக்ரேன் பிரச்சினை குறித்து நடத்திய விவாதத்தில் ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூ சோங் கூறுகையில், அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து அமெரிக்காவும் ரஷியாவும் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள் உள்ளிட்ட உக்ரேனின் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கின்றது என்றார்.
அதே வேளையில், இந்த அமைதி பேச்சுவார்த்தையில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும், பங்குதாரர்களும் பங்கேற்ற வேண்டும் என்றும் நியாயமான, நீடித்த, கட்டுப்பாட்டு ஆற்றல் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதான உடன்படிக்கையை எட்ட வேண்டும் என்றும் சீனா எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தார்.