சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஏப்ரல் 4ஆம் நாள் கூறுகையில், சீன மக்கள் குடியரசின் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம், யிட்ரியம் உள்ளிட்ட அரிய வகை தாதுப் பொருட்களுக்கான ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கை பற்றிய அறிக்கையை சீன வணிக அமைச்சகமும், சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகமும் 4ஆம் நாள் கூட்டாக வெளியிட்டன. இந்நடவடிக்கை 4ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இத்தகைய தாதுப் பொருட்கள் பொது மக்களாலும் இராணுவத்தாலும் பயன்படுத்தப்படக்கூடும். இதனால், இப்பொருட்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்வது, பொதுவான சர்வதேச நடைமுறை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.