இந்திய தலைமை நீதிபதி(CJI) பூஷண் ஆர். கவாய், தனக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க, மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, வாரிசு நியமன செயல்முறையைத் தொடங்கி வைத்துள்ளார்.
தலைமை நீதிபதி கவாய் நவம்பர் 23 அன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், நீதிபதி சூர்யா காந்த் இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நவம்பர் 24 அன்று பதவியேற்க தகுதி பெறுகிறார்.
அவர் பிப்ரவரி 9, 2027 வரை, சுமார் 14 மாதங்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.
நீதிமன்ற நியமனங்களை நிர்வகிக்கும் நடைமுறை குறிப்பேட்டின்படி, உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியே தலைமை நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால மரபு பின்பற்றப்பட்டுள்ளது.
அடுத்த இந்திய தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் பெயரை பரிந்துரைத்தார் நீதிபதி கவாய்
