பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தரவரிசை சுற்று இன்று நடைபெற்றது.
அதில், இந்திய வில்வித்தை மகளிர் அணி, 4வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அங்கிதா பகத், பஜன் கவுர் மற்றும் தீபிகா குமாரி அடங்கிய இந்திய வில்வித்தை மகளிர் அணி ஜூலை 28ஆம் தேதி நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் காலிறுதிச் சுற்றில், கொரிய அணியுடன் மோதுவார்கள்.
தரவரிசை சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட அங்கிதா பகத் இந்த சீசனில் தரவரிசை பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோல அணியின் தரவரிசையில், கொரிய அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து சீனா மற்றும் மெக்சிகோ முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.