நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக பணியாளர் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூலை மாதம் பூமிக்கு திரும்ப மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் திரும்பும் திட்டம் மீண்டும் தாமதமானதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஸ்டார்லைனர் விண்கலத்தில் நடத்தப்பட்ட ரியாக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (ஆர்.சி.எஸ்) த்ரஸ்டரின் விரிவான தரை சோதனை மற்றும் ஆய்வுகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லைனரில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்ய ஸ்டார்லைனர் குழு இப்போது தரவை மதிப்பாய்வு செய்து வருகிறது.