முன்கண்டிராத அளவில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம்

 

உயர்தர வளர்ச்சியை விரைவுபடுத்துவது குறித்து சிறப்பு செய்தியாளர் கூட்டம் சீன அரசவையின் செய்தி அலுவலகம் இன்று நடத்தியது. இதன்படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இது வரை, சீனாவின் வெளிநாட்டு வர்த்தக அதிகரிப்பு ஆண்டுக்கு சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டில், சீனாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத் தொகை 41 இலட்சத்து 76 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. சீனாவின் மொத்த சரக்கு வர்த்தகத் தொகை தொடர்ந்து 7 ஆண்டுகாலமாக உலக அளவில் முதலிடத்தில் பிடித்துள்ளது. 150க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளாகவும் சீனா மாறியுள்ளது. இவ்வாண்டின் முதல்பாதியில், முதன்முறையாக சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் தொகை 21 இலட்சம் கோடி யுவானை தாண்டி, புதிய பதிவைக் கண்டது. சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் அதிவேக வளர்ச்சியை நனவாக்கி, புதிய காலத்தில் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author