ஸ்பெயினில் புதிய யுகத்தில் ஆழமான சீனச் சீர்திருத்தத்தால் உலகிற்குக் கிடைக்கும் வாய்ப்புகள் எனும் பேச்சுவார்த்தை நிகழ்வு

சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த புதிய யுகத்தில் ஆழமான சீனத் சீர்திருத்தத்தால் உலகிற்கு கிடைக்கும் வாய்ப்புகள் எனும் பேச்சுவார்த்தை நிகழ்வும், சீன-ஸ்பேனிய மக்கள் தொடர்பு நிகழ்வும், ஜுலை 29ஆம் நாள் அந்நாட்டின் மாட்ரிடில் நடைபெற்றது.

இதில், சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைசியொங் உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், அண்மையில் நிறைவடைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வு, புதிய யுகத்தின் சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக்கு மற்றொரு முக்கிய மைல் கல் ஆகும். சீன நவீன மயமாக்கல், உலகிற்கு அதிகமான நலன்கள் தரும் என்பது உறுதி.

சீனா மேலும் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, மாற்றம் மற்றும் குழப்பம் நிறைந்த உலகிற்கு அதிகமான உறுதித்தன்மையை அளித்து, மனித குலத்தின் கூட்டு வளர்ச்சி மற்றும் செழுமைக்கு சீனாவின் பங்களிப்பை ஆற்றும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author