சீன வளர்ச்சி மன்றத்தின் 2023ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன், சீன தலைமை அமைச்சர் லி ச்சியாங், 27ஆம் நாள் மாலை, பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.
கடந்த பல ஆண்டுகளில் சீன வளர்ச்சிக்கு பங்கு ஆற்றியுள்ள அவர்களுக்கு லீ ச்சியாங் நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய உலக பொருளாதாரம், மாறி வரும் சிக்கலான சூழலில் உள்ளது. அறைகூவல் மற்றும் இன்னல்களைச் சமாளிக்கும் விதம், முதலில் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
வெளிநாட்டு திறப்புப் பணியில் சீனா உறுதியாக ஊன்றி நிற்கும். சீனாவில் முதலீடு செய்தால், சிறந்த எதிர்காலத்தைப் பெறலாம். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஒத்துழைப்பு மேற்கொள்ளவும் ஒன்றுக்கு ஒன்று நன்மை தந்து கூட்டு வெற்றி பெறவும் சீனா விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.