ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே புதன்கிழமை அதிகாலை தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனை ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
காசாவில் இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்ட பாலஸ்தீனிய அமைப்பான ஹமாஸ், தெஹ்ரானில் உள்ள அதன் தலைவர் இஸ்மாயில், அவரது இல்லத்தில் “இஸ்ரேல்” நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், உடன் அவரது மெய்க்காப்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் கூறியது.
ஹமாஸ் தனது அறிக்கையில், “தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு துரோக சியோனிஸ்ட் தாக்குதலில்” ஹனியே கொல்லப்பட்டதாகக் கூறியது.