சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மார்ச் 27ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், நெதர்லாந்தின் தலைமையமைச்சர் மார்க் ரூட்டேவுடன் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீன-நெதர்லாந்து உறவு சீராக வளர்ச்சியடைந்து, பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு தொடர்ச்சியாக ஆழமாகி வருகிறது. நெதர்லாந்துடன் பல்வேறு நிலையிலான தொடர்பை நிலைநிறுத்தி, பேச்சுவார்த்தை, பரஸ்பர நலன், கூட்டு வெற்றி ஆகியவற்றில் ஊன்றி நின்று, சீன-நெதர்லாந்து பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது. அத்துடன், ஐ.நா, உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட பல தரப்பு அமைப்புகளில், நெதர்லாந்துடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, காலநிலை மாற்றம், உயிரினப் பல்வகைமை முதலிய உலக அறைக்கூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க சீனா விரும்புகிறது என்றார்.
மேலும், கூட்டு வெற்றி என்ற சிந்தனையுடன், உயர்நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியை சீனா தொடர்ந்து விரிவுபடுத்தி, பல்வேறு தரப்புகளுடன் வளர்ச்சி நலன்களைப் பகிர்ந்து கொள்ளும். சீன-ஐரோப்பிய புரிந்துணர்வை முன்னேற்றுவதற்கு நெதர்லாந்து தொடர்ந்து ஆக்கமுடன் பங்காற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
மார்க் ரூட்டே கூறுகையில், சீனாவுடன் கூட்டாளி உறவைத் தொடர்ச்சியாக ஆழமாக்கி, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், கரி வெளியேற்றத்தை குறைப்பது உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, சர்வதேச மற்றும் பிரதேசத்தின் சூடான பிரச்சினைகளில் சீனாவுடன் தொடர்பு மற்றும் ஒன்றிணைப்பை வலுப்படுத்த நெதர்லாந்து விரும்புகிறது என்றார்.