கடல் அலுவல் பற்றிய சீன-ஜப்பான் உயர் நிலைக் கலந்தாய்வு அமைப்பு முறையின் 15ஆவது கூட்டம் ஜப்பானின் டோக்கியோவில் ஏப்ரல் 10ஆம் நாள் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சகம், கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளி விவகார அலுவலகம், தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட வாரியங்கள் மற்றும் ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்ளிட்ட வாரியங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
கடல் பாதுகாப்பு, கடல் நிர்வாகம், கடல் பொருளாதாரம் ஆகியவை பற்றிய மூன்று கூட்டங்களை இருத்தரப்பினரும் நடத்தி, இரு நாடுகளுக்கிடையில் கடல் பற்றிய அலுவல்கள் குறித்து ஆழமாக பரிமாற்றம் மேற்கொண்டனர்.
இரு நாடுகளின் பாதுகாப்பு வாரியங்கள் உருவாக்கிய கடல்-வான் தொடர்பு அமைப்புக்கு இருதரப்பினர்கள் பாராட்டு தெரிவித்தது, இரு நாட்டு கடல் பாதுகாப்பு வாரியங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டது உள்ளிட்ட 8 கருத்து ஒற்றுமைகள் இக்கூட்டத்தில் எட்டப்பட்டன.