சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 10ஆம் நாள் குவாங்டோங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார். ட்சென்ஜியாங் நகரை முதலில் சென்றடைந்த அவர், உள்ளூர் கடல் மீன்பிடித் தொழிலின் வளர்ச்சி, அலையாத்தி காடுகள் பாதுகாப்புப் பணி, போக்குவரத்து உள்கட்டமைப்பின் இணைப்பு நிலை, குவாங்டோங் மற்றும் ஹாய்நானின் கூட்டு வளர்ச்சி, நீர் வள ஒதுக்கீட்டின் மேம்பாடு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் விதம், நாட்டின் உயர் தொழில் நுட்ப ஆய்வு மற்றும் வளர்ச்சித் திட்டத்தின் கீழுள்ள கடல் பண்ணை திட்டப்பணியின் தெற்கு தளம், ஹுகுவாங் வட்டத்திலுள்ள அலையாத்தி காடுகள் பகுதி, ஷுவென் துறைமுகம், குவாங்டோங் நீர் வள ஒதுக்கீட்டுத் திட்டப்பணி ஆகியவற்றை முறையே பார்வையிட்டார்.