இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இனி கிரெடிட், காசோலை, மொபிக்விக், ஃப்ரீசார்ஜ் போன்ற தளங்களில் வாடகை செலுத்தினால் ஒரு சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு காண கட்டண விதிமுறைகளை எச்டிஎப்சி வங்கி மாற்றியுள்ள நிலையில், PayTM, CRED, Mobikwik போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் வாடகை செலுத்த கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் Utility bills செலுத்தினாலும், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள் நிரப்ப 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பயன்படுத்தினாலும் ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விதிகள் ஆகஸ்ட் 1 இன்று முதல் அமலுக்கு வருகின்றன.