சீனா-பிரான்ஸ் தூதரக உறவின் 60ஆம் ஆண்டு நிறைவு குறித்து ஊடக ஒத்துழைப்புத் திட்டம்

சீனா மற்றும் பிரான்ஸ் இடையேயான தூதரக உறவு உருவாக்கப்பட்டதன் 60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் கூட்டாக தயாரிப்பது என்ற ஒத்துழைப்புத் திட்டத்தை சீன ஊடகக் குழுமம் அக்டோபர் 24ஆம் நாளன்று பாரிஸ் மாநகரில் தொடங்கி வைத்துள்ளது.

இதில், பிரான்ஸ் நாட்டின் பல முக்கிய ஊடக நிறுவனங்களுடன் பல ஒத்துழைப்பு செயல்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
சீன ஊடகக் குழுமத் தலைவர் ஷென் ஹைய்சியோங் கூறுகையில்
2024ஆம் ஆண்டு, சீனா-பிரான்ஸ் உறவின் வரலாற்றில் மிகவும் முக்கிய ஆண்டாகும்.

இரு நாடுகளின் தூதரக உறவில் 60ஆம் ஆண்டு நிறைவு மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றை வாய்ப்பாகக் கொண்டு, பிரான்ஸின் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து, நிகழ்ச்சிகளின் கூட்டு தயாரிப்பு மற்றும் ஒளிபரப்பு, செய்திகளின் பரிமாற்றம், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஒளிபரப்பு, பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது. இந்த முயற்சி, இரு நாட்டுறவின் நிலையான மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு பெரிய பங்கு ஆற்றுவதாக குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author