உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் திருக்கோவில் மலைமீது அமைந்துள்ள நிலையில் தினசரி ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்த கோவிலுக்கு செல்வதற்கு படிப்பாதை மற்றும் யானை பாதை என பிரதான பாதைகள் இருக்கிறது. அதுபோக மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவை போன்றவைகளும் அமலில் இருக்கிறது. இதில் ரோப் காரில் செல்லும்போது இயற்கை அழகை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் பலர் அதை விரும்புகிறார்கள்.
இந்நிலையில் ரோப் காரில் கோவில் நிர்வாகம் சார்பில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் ரோப் கார் சேவை இன்று நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பிரதான பாதை மற்றும் மின் இழுவை ரயில் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.