வேளாண் வல்லரசின் கட்டுமானம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் “வேளாண் வல்லரசின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, வேளாண் மற்றும் கிராமப்புற நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது” என்ற தலைப்பில் எழுதிய முக்கிய கட்டுரை, மார்ச் 16ஆம் நாள் ச்சூஷி இதழில் வெளியிடப்படும்.
இக்கட்டுரையில், வேளாண் வல்லரசின் கட்டுமானம் என்ற குறிக்கோளுடன், வேளாண்மை மற்றும் கிராமப்புறப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, கிராமப்புற வளர்ச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கட்டுமானத்தில் தானியம் மற்றும் முக்கியமான வேளாண் பொருட்களின் பாதுகாப்பான விநியோகத்தை உத்தரவாதம் செய்வது எப்போதுமே முதன்மை பணியாகும். கிராமப்புற வளர்ச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்றுவது, புதிய யுகத்தில் முக்கிய கடமையாகும் என்றும் இக்கட்டுரையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
தவிரவும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், சீர்திருத்தம் ஆகியவற்றின் மூலம் வேளாண் வல்லரசின் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும். கிராமப்புறத்தின் நவீனமயமாக்கத்தைப் பெரிதும் முன்னேற்ற வேண்டும். வேளாண் வல்லரசின் கட்டுமானத்துக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பன்முகத் தலைமையை வலுப்படுத்த வேண்டும் என்றும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author