சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 3ஆம் நாள் ஜெர்மனி தலைமை அமைச்சர் ஓலஃப் ஷோல்ஸுடன் காணொளி வழியில் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், தற்போதைய சர்வதேச நிலைமை பெருமளவில் மாறி வருகிறது. புவிசார் மோதல் தீவிரமாகி, பொருளாதார மீட்சி தாமதமாகி வருவதோடு, பனிப்போர் சிந்தனை மீண்டும் தோன்றிள்ளது.
பொறுப்புணர்வுமிக்க பெரிய நாடுகளான சீனாவும் ஜெர்மனியும் இருதரப்பு உறவைச் சீராக வளர்த்து, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவதற்கான முன்மாதிரியாக திகழும் அதேவேளை, சர்வதேச ஒழுங்கு மற்றும் பலதரப்புவாதத்தைப் பேணிக்காத்து, உலகளாவிய சவால்களைக் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஷோல்ஸ் பேசுகையில், ஜெர்மனி-சீன உறவு ஜெர்மனிக்கு மிக முக்கியமானது. இருநாடுகளிடையே சீரான உறவை நிலையாக வளர்த்து, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்கவும் ஐரோப்பிய-சீன உறவின் ஆக்கப்பூர்வ வளர்ச்சியை முன்னேற்றவும் ஜெர்மனி விரும்புகிறது என்று தெரிவித்தார்.