சிபிசிக்கும் உலக அரசியல் கட்சிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் ஷி ச்சின்பிங் பங்கேற்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உலக அரசியல் கட்சிகளின் உயர்நிலை பேச்சுவார்த்தை மார்ச் 15ஆம் நாளிரவு தொடங்கியது. நவீனமயமாக்கத்துக்குச் செல்லும் பாதை: அரசியல் கட்சிகளின் பொறுப்பு என்பது காணொளி வழியாக நடத்தப்படும் நடப்பு பேச்சுவார்த்தையின் தலைப்பாகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் இப்பேச்சுவார்த்தையின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், மனிதரின் சுதந்திரமான பன்முக வளர்ச்சியை நனவாக்குவது நவீனமயமாக்கத்தின் இலக்காகும்.

அருமையான வாழ்க்கை மீதான பொது மக்களின் எதிர்பார்ப்பை அரசியல் கட்சிகள் குறிவைத்து, நாகரிக முன்னேற்றம் மீதான மக்களின் ஆர்வத்தின்படி, பொருட்களின் செழுமை, தூய்மையான அரசியல், அமைதியான சமூகம், சிறந்த சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றை நனவாக்க வேண்டும்.

நவீனமயமாக்கத்தின் மூலம் பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்து, மனிதகுலத்தின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும், கூறுகையில், பல்வேறு நாகரிகங்களின் ஒன்றிணைப்பு, பரிமாற்றம் மற்றும் பகிர்வு ஆகியவை, மனித குலத்தின் நவீனமயமாக்கப் போக்கில் ஈடிணையற்ற பங்காற்றி வருகின்றன. இந்நிலையில், உலக நாகரிக முன்மொழிவை முன்வைக்க விரும்புகிறேன் என்றார்.


மேலும், உலகத்தில் நாகரிகத்தின் பல்வகைமைக்கு மதிப்பு அளிப்பதோடு, நாகரிகத்தின் பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், சர்வதேச மானுடவியல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.


அரசியல் கட்சிகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சீரான பாதையில் கூட்டாக முன்னேறுவதற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபட்டு வருகிறது. பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகளுடன் தொடர்புகளை வலுப்படுத்தி, ஒத்த கருத்து மற்றும் நலன்களை அதிகரிக்க விரும்புகிறோம்.

அரசியல் கட்சிகளுக்கிடையே புதிய ரக உறவை உருவாக்குவதன் மூலம் புதிய ரக சர்வதேச உறவுகளை நிறுவுவதற்கும், உலக அரசியல் கட்சிகளின் கூட்டுறவை மேம்படுத்துவதன் மூலம் உலக கூட்டுறவை விரிவாக்குவதற்கும் துணைபுரிய விரும்புகிறோம் என்றும் ஷி ச்சின்பிங் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author