இந்த நாட்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன.
ஆனால், இளம் தலைமுறைகளிடம் IAS மற்றும் IPS – பதவியின் மீதான காதல் அதீதமானது. இதனால், பலரும் தனது வாழ்நாளில் IAS அல்லது IPS ஆக வேண்டும் என சபதம் மேற்கொண்டு, இரவு -பகலாக படித்து தயாராகி வருகின்றனர். ஆனாலும், அதில் ஒரு சிலரே IAS மற்றும் IPS தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.
இந்த நிலையில், உத்தரபிரதேம் மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ளது மாதோபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் பிறந்தவர்கள் செய்த சாதனையால், இன்று இந்தியாவே இந்த கிராமத்தை திரும்பி பார்க்கவைத்துள்ளது. காரணம், இந்த ஒரு கிராமத்தில் இருந்து இதுவரை சுமார் 51 பேர் IAS மற்றும் IPS தேர்வுகளில் வெற்றி பெற்று, IAS மற்றும் IPS அதிகாரிகளாக வெற்றி வலம் வருகின்றனர்.
இந்த கிராமம் உத்தரபிரதேசம் தலைநகரான லக்னோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்படி பெருமை வாய்ந்த இந்த மதோபட்டி கிராமத்தை அக்கம் பக்கத்து கிராம மக்கள், IAS மற்றும் IPS தொழிற்சாலை என செல்லமாக அழைக்கின்றனர்.
தீபாவளி மற்றும் மகரசங்கராந்தி உள்ளிட்ட முக்கிய விடுமுறை நாட்களில் மட்டும், இந்த ஊரைச் சேர்ந்த IAS மற்றும் IPS அதிகாரிகள் தங்ளது அம்மா, அப்பா மற்றும் உறவுகளை பார்த்துவிட்டு அப்பேவே, வேலைக்கு சிட்டாக பறந்துவிடுவார்களாம். இந்த கிராமத்தில் மொத்தமே 75 வீடுகள் உள்ள நிலையில், அதில் 51 பேர், IAS மற்றும் IPS அதிகாரிகள். தி கிரேட் மதோபட்டி.