சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 26ஆம் நாள் சீன வளர்ச்சி மன்றத்தின் 2023ஆம் ஆண்டு கூட்டத்துக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துக் கடிதத்தில் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டுகையில், தற்போது, உலகம் கடந்த நூறு ஆண்டுகளிலும் காணாத மாற்றங்களுடன் வேகமாக வளர்ந்துள்ளது. அதேசமயம் பிரந்திய மோதல் மற்றும் கொந்தளிப்புகளும் அவ்வப்போது நடைபெறுகின்றன. இந்நிலையில், உலகப் பொருளாதாரம் மீட்சி பெறுவதற்குப் போதுமான உந்து ஆற்றல் இல்லை. மீட்சியைப் பெறுவதற்கு ஒத்த கருத்தும் ஒத்துழைப்பும் தேவை. சீனா முன்வைத்துள்ள உலக வளர்ச்சி முன்னெடுப்பு, சர்வதேச சமூகத்தில் பரந்த அளவிலான ஆதரவைப் பெற்றுள்ளது. வெளிநாட்டுத் திறப்பு என்ற அடிப்படை கொள்கையிலும், பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி பெறும் திறப்பு நெடுநோக்கிலும் சீனா தொடர்ந்து ஊன்றி நிற்கும். சீனாவின் புதிய வளர்ச்சி மூலம் உலகத்துக்கு புதிய வாய்ப்புகளைத் தொடர்ந்து கொண்டு வரும். விதிமுறை, மேலாண்மை, வரையறை உள்ளிட்ட அமைப்பு முறை ரீதியிலான திறப்பைச் சீனா விரிவாக்கி பன்னாடுகளும் பல்வேறு தரப்புகளும் அமைப்பு முறை ரீதியிலான திறப்பு வாய்ப்புகளைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வதை முன்னேற்றவிக்கும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.
சீன வளர்ச்சி மன்றத்தின் 2023ஆம் ஆண்டு கூட்டம் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. பொருளாதார மீட்சி:வாய்ப்பும் ஒத்துழைப்பும் என்பது அதன் கருப்பொருளாகும்.