பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறை கேட்டில் நான்கு மாணவர்கள் மற்றும் 13 பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்தநிலையில் நீட் தேர்வில் தவறு நடந்தால் ஒப்புக்கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீர் முறைகேடு புகார் தொடர்பாக இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தவறு இழைப்பது சமூகத்திற்கு ஆபத்து என்றும் தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.