சீன பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மத்திய ஆசிய மாணவர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் அனுப்பிய பதில் கடிதத்தில், சீன-மத்திய ஆசிய உறவின் வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்று ஊக்கமளித்தார்.
சீனாவும் மத்திய ஆசிய நாடுகளும் மலைகள் மற்றும் ஆறுகளால் இணைக்கப்பட்டு, ஆழ்ந்த நட்புறவையும் பொது எதிர்காலத்தையும் கொண்டுள்ளன. மத்திய ஆசிய நாடுகளில் பட்டுப்பாதை பொருளாதார மண்டலத்தை கூட்டாக கட்டமைப்பதற்கான முன்மொழிவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளில் இருதரப்புறவு புதிய நிலை நோக்கி முன்னேறி வருவதோடு, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பும் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது இருதரப்பு மக்களுக்கு நன்மைகளைத் தந்துள்ளது என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.
மேலும், சீன-மத்திய ஆசிய நட்புறவு, நம்பிக்கைக்குரிய இளைஞர்களால் தலைமுறை தலைமுறையாக பேணிக்காக்கப்பட்டு பரவல் செய்யப்பட வேண்டும். இருதரப்புறவை நேரில் கண்டு இதிலிருந்து நன்மை பெற்ற மத்திய ஆசிய மாணவர்கள் நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கான தூதராக, நெருக்கமான சீன-மத்திய ஆசிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்குப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.