மைக்ரோனேசிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

மைக்ரோனேசியாவின் புதிய அரசுத் தலைவராகப் பதவி ஏற்றுள்ள வேஸ்லி சிமினாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
தன் வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-மைக்ரோனேசிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 34 ஆண்டுகளில், சமநிலையில் பழகி, பரஸ்பர மதிப்பு கொடுக்கும் அடிப்படையில், இரு நாட்டுறவு பெரும் முன்னேற்றங்கள் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், சிமினாவுடன் இணைந்து, மைய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்கி, சீன-மைக்ரோனேசிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னெடுத்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author