சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பிலிப்பைன்ஸ் முன்னாள் அரசுத் தலைவர் டுடெர்டேவுடன் ஜூலை 17ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் பிலிப்பைன்ஸும் ஆசியாவில் வளரும் நாடுகளாகும். சுமூகமான மற்றும் நட்புப்பூர்வமான சூழ்நிலை, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி ஆகிய அடிப்படைகளில் இரு நாடுகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. இரு நாட்டுறவுக்குச் சீனா எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிலிப்பைன்ஸுடன் இணைந்து இரு நாட்டுறவின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.
பிலிப்பைன்ஸின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா வழங்கிய ஆதரவுக்கு டுடெர்டே நன்றி தெரிவித்தார். மேலும், இரு நாட்டுறவின் வளர்ச்சி, இரு நாட்டு மக்களின் பொது நலன்களுக்குப் பொருந்தியது. இரு நாட்டு நட்புறவை முன்னேற்றுவதற்குத் தொடர்ந்து பங்காற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.